சட்ட ஆலோசனைகள்

பதிவு செய்துகொள்வதற்கு
நேரடியான சமூகளிப்பு மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். தொலைபேசியில் அல்ல. ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை 8.30 மணிக்கு சமூகளித்து உங்களை பதிவு செய்துகொண்டால் அதே நாள் காலையில் உங்களுக்கான ஆலோசனை நேரம் ஒதுக்கப்படும்.
மாதத்தின் முதல் திங்கள் கிழமை தவிர்த்து, மற்றைய ஒவ்வொரு திங்கள் கிழமையும் இந்த ஆலோசனை சுழற்சி நேரம் ஒதுக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசு அதிகாரபூர்வ கடிதங்கள், இடம்பெயர்வு, அகதிகள் கோரிக்கை தொடர்பில் முக்கிய முடிவுகள் மற்றும் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கும் கடிதங்கள் உட்பட நீங்கள் முக்கியமாக கருதும் அனைத்து ஆவணங்களையும் சமூகமளிக்கையில் கொண்டு வரவும்.
இந்த முகவரிக்கு வருகை தரவும்
Dienerstrasse 59, 8004 Zürich
Freiplatzaktion Zürich அமைப்பு, தொழில் நிபுணத்துவம் மிக்க மற்றும் இலவச சட்ட ஆலோசனைகளை அகதிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்குகிறது. உங்களது அகதி அந்தஸ்து கோரிக்கை பரிசீலனையில் உள்ளதெனில் அதன் ஒவ்வொரு சட்ட படிநிலையிலும் நீங்கள் எம்மை நாடலாம். உங்களது சந்தேகங்களை கேட்கலாம், நாம் தேவையான புதிய தகவல்களை வழங்குவதுடன், சட்ட ஆலோசனைகள் மற்றும் ஆதரவினை நாம் வழங்குகிறோம். புதிய விண்ணபங்களை கோருகிறீர்கள் எனில் அல்லது, மேன்முறையீடு எதுவும் செய்ய விரும்புகிறீர்கள் எனில், உங்கள் சார்பில் சட்டரீதியாக அவ்விண்ணப்பங்களை மேற்கொள்ளும் பிரதிநிதிகளாகவும் நாம் செயற்படுகிறோம்.
எமது ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஒரு தொழில் சட்ட வல்லுனரை நாடுவதற்கு பணமில்லாதவர்களுக்கு இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் அளிக்கின்றன.
ஜேர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய மொழிகளில் எமது ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மற்றைய மொழிகள் பேசுபவர்கள், ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்து வரவும்.
ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை 8.30 மணிக்கு சமூகளித்து உங்களை பதிவு செய்துகொண்டால் அதே நாள் காலையில் உங்களுக்கான ஆலோசனை நேரம் ஒதுக்கப்படும்.